நாகேந்திர பாரதி/அப்பா

வட்ட எருவை வைத்தபோது
எட்டிப் பார்த்த நினைவுகள் எத்தனை

இந்த முகத்திற்கு இறுதி நாளா
இனிமேல் இல்லையா எழுந்து நடப்பது

வரப்பில் நடந்த கால்கள் எங்கே
நுங்கை ஊட்டிய விரல்கள் எங்கே

அதிர்ந்து சிரித்த சிரிப்பு எங்கே
சுமைகள் தாங்கிய தோள்கள் எங்கே

ஒவ்வொரு முறையும் பிரியும் போதும்
இனிமேல் பார்ப்பேனே என்ற ஏக்கத்தை

உதட்டில் வெடித்து முழுங்கப் பார்த்து
முடியா உணர்வைக் கண்ணில் காட்டி

சிரித்து மழுப்பி அனுப்பி வைத்த
தந்தைப் பாசத்தின் தகவல் எங்கே

பிறப்பும் இறப்பும் வாழ்வின் ஒழுங்கென
புரிந்தும் கூட அடக்க முடியாத

அழுகை தந்த அன்பின் உருவம்
அப்பா எங்கே , அப்பா எங்கே

One Comment on “நாகேந்திர பாரதி/அப்பா”

  1. அன்பின் உருவம் அப்பாதான். இருக்கும் போது புரிந்து கொண்டதை விட இல்லாத நிலையில்தான் அவரது பாசம் அருமை தெரிகிறது எனக்கு.

Comments are closed.