அழகியசிங்கர்/புத்தகம்..புத்தகம்..புத்தகம்

சமீபத்தில் நான் படித்த புத்தகம் காகித மாளிகை என்ற முப்பாள ரங்கநாயகம்மவின் நாவல். இதைத் தற்செயலாக படிக்க நேர்ந்தது. என் நூல் நிலையத்தில் எதிர்பாராத விதமாய் கரையான் வந்து சில புத்தகங்களை நாசம் செய்து விட்டது.

அந்தத் தருணத்தில் புத்தகங்களை மாற்றி வைக்கும் போது என் கண்ணில் பட்ட புத்தகம் மேலே குறிப்பிட்ட புத்தகம். இதை ஒரு பிளாட்பார கடையில் எப்பவோ வாங்கினேன். புத்தகத்தைக் கையில் எடுத்தவுடன் முழுவதும் படிக்க வேண்டுமென்று தீர்மானித்தேன்.

இது ஒரு விறு விறு டைப். பானுமதி என்கிற மையப் பாத்திரத்துக்கு நடக்கிற கொடுமையைக் கூறும் நாவல்.
இப்படி கொடுமை செய்யும் கணவனுடன் ஏன் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தாள் என்ற கேள்விக்குப் பதில் இல்லை.
நாவல் இறுதியில் பானுமதி என்கிற கதாபாத்திரம் தற்கொலை செய்து கொள்கிறாள்.
அவள் பிறந்த வீடு ஏன் அவளைக் காப்பாற்றவில்லை. ஒன்று விட்ட சகோதரனிடம் தன் இயலாமையை சொல்லிக் கொண்டே போவதுதான் இந்த நாவல்.
ஒரு குழந்தை இருந்தும் அவள் துயரம் குறைந்தபாடில்லை. இந்த நாவல் துக்கத்தை பிழிந்தெடுக்கிற நாவல்.
ஆனால் படிக்க படிக்க விறு விறு குறையவில்லை. நான் இந்த நாவலை என் நண்பர் ஒருவருக்கு அன்பளிப்பாக தர உள்ளேன்.