மீனாட்சி சுந்தரமூர்த்தி/போரும், பசியும்

ஆதிமனிதன் குகையில்
வாழ்ந்தான்,
விலங்குகளோடு போரிட்டான்
உணவும்,
தற்காப்பும் நோக்கமானது..

குழுவெனக் கூடிய வேளை
தலைமைக்கு
நேரிட்டது பகையும், போரும்.

நாகரிகம் தொட்டவேளை
நாடு,நகரம்
பிடிபட, மணிமுடி தேட
வந்தது
சண்டை சச்சரவு.

மண்ணுக்கும், பொன்னுக்கும்
மட்டுமல்லப்
பெண்ணுக்கும் பெரும்போர்
குருசேத்திரம்
இன்றும் சான்று.

அன்றும்,இன்றும், என்றும்
தன்னலம்
ஒன்றே போரின் ஆணிவேர்

பொற்காலமென வரலாறு
சொல்லும்
சங்க்காலத்திலும் போரின்
விளைவே
பொதுப்பெண்டிர் எனில்
மறுப்புண்டோ ?.

வசியும், வளனும் அழிக்கும்,
பசியும்,
தீங்கும் வளர்க்கும் ,
சொட்டுநீர்
தேடி மழலைகள் மாயும்.

காடுவாழ் புலியும்,நரியும்
கைகொட்டிச்
சிரிக்கும் , ஒத்து உதவி
வாழ்ந்தால்
குறைவதென்ன
மானிடரே என்று.

One Comment on “மீனாட்சி சுந்தரமூர்த்தி/போரும், பசியும்”

Comments are closed.