வே.கல்யாண்குமார்./நான்கு நாய்க்குட்டிகள்.!

எங்க வீட்டுத் தோட்டத்திலே..

இன்று நாய்குட்டி போட்டதடி.!
நான்கு குட்டிப் போட்டதடி அது
நாலும் நாலு வண்ணமடி
வெள்ளை நிறத்தொருக் குட்டி..
என் வீட்டுக்குள் வந்து விளையாடுதடி..
செல்லம் சிவப்புநிறக் குட்டி..
பல சேட்டைகள் செய்து காட்டுதடி..
கள்ளக் கருப்புநிறக் குட்டி..
என் காலைச்சுற்றிக் குதிக்குதடி.. சுட்டி..!
மெல்லக் கண்திறந்துக் குட்டி..
எம்மை மெய்சிலிர்க்க வைக்குதடி நாய்க்குட்டி!
எல்லாம் ஒரு வயிற்றுக் குட்டி..
அதனுள் எதிலும் பேதமில்லை சுட்டி…
வல்லோன் நான் என்று மார்த் தட்டி..
வாழும் மனிதரகளே கேட்பாய்!
வேறு வேறு நிறம் நாய்க் குட்டி..
அவை யாவும் ஒரு தாய்க் குட்டி..
பேதம் பார்ப்பதில்லை நாய்க் குட்டி..
பிறப்பில் பேதம் பார்ப்பவன் இங்கு மட்டி.!
சாதி மதம் மொழி என்று பேதம் காட்டி..
பிரியாதே மனிதனே உறவாடு ஒட்டி.
இந்த பாடம் நடத்துகிறது நாய்க்குட்டி..
இதை அறிந்து நடந்தால் நீதான் தங்கக் கட்டி.!

மீனாட்சி சுந்தரமூர்த்தி/போரும், பசியும் – விருட்சம் நாளிதழ்

2 Comments on “வே.கல்யாண்குமார்./நான்கு நாய்க்குட்டிகள்.!”

Comments are closed.