
வீட்டுக்குள் மழை வெள்ளம்
படியேறி மாடியை எட்டிப்
பார்த்தது
அங்கிங்கெனாதபடி எங்கும்
நீரில் மிதந்தன பொருள்கள்
ஏரிப்படுகையில் மனை
வாங்க வேண்டாம் என்ற
தாத்தாவின் படம்
ஒரு பக்கம் மிதந்தது
இன்னொரு பக்கம்
ஏரி ஊராகி இத்தனை வருடங்கள் வராத தண்ணீர்
இனி மேலா வர போகுது
என குறைந்த விலைக்கு
இடம் வாங்கி வீடு கட்டிய
அப்பாவின் படம் மிதந்தது
இடையினில் நாங்கள்
மீட்பு படகினில் மிதந்தோம்
கரையை தேடி.
வே.கல்யாண்குமார்./நான்கு நாய்க்குட்டிகள்.! – விருட்சம் நாளிதழ்
