
தாய்ப் பறவையின்
அரவணைப்புக் கதகதப்பில்
உணவுத் தேடலின்றி
கால் நடத்தலின்றி
இறக்கைப் பறத்தலின்றி
உயிர்வாழ் போராட்டமின்றி
அனைத்தும் அன்னையிடமாயென
சரணாகதியடைந்த நாட்கள் மறைந்து
உணவுக்கும்
உயிர் வாழ்தலுக்கும்
நடைக்கும் பறப்பிற்கும்
பரபரப்பான பொதுவானில்
நீந்துதலாய் பறப்பது-
அவளில்லாப் பிரபஞ்சத்தில்
அனுதினமும் பெரும்பாடாய் போகிறது–
எனக்கு…!

அருமை 👌✍️
அம்மான்னா சும்மாவா?