
- ஓ… மழையே
உனக்கு யார் மீது கோபம் - மழை பெய்து
கொண்டிருக்கிறது
எங்கள்
தெரு அழுது
கொண்டிருக்கிறது - மழையில்
நனையவில்லை
இந்தமுறை
ஆனால்
பால்கனியிலிருந்து
வேடிக்கைப் பார்த்துக்
கொண்டிருந்தேன். - ஒருவர்
மழை என்றார்
இன்னொருவர்
மழை என்றார்
மூன்றாமவர் மழை என்றார்
எல்லோரும் மழை மழை
என்றார்கள்
மழை பெய்து கொண்டே இருக்கிறது
