
உறுதி மாழி 82
20.05.2025 அன்று கவிதை வாசிக்கலாம் வாங்க நிகழ்வில் வாசித்த கவிதைகள்
இன்றோடு
நழுவிய பதக்கங்கள் எவரையும்
நினைவூட்டப் போவதில்லை-
வளைந்த மீசை கொண்ட
பயணியை மீண்டும்
சந்திக்கப் போவதில்லை-
நந்தவனமெனக் கண்டதில்
பழுதில்லை;
உலாவ முயன்றதில் தான் தவறு-
தொடைகள் நடுவில் புதைந்த தலையணை
இன்று உலகோடு கொள்ளும் நட்பு.
உறுதிமொழி 84
மெல்ல
தன்னையே எடுத்து நிறுத்திக் கண்டார்
மெல்ல
உள்ளதை எடுத்து நிறுத்திக் கண்டார்.
மெல்ல
அற்றதை எடுத்து நிறுத்திக் கண்டார்.
உள்ளதும் அற்றதும் கண்டவர் மெல்ல தன்னையே எடுத்து– நிறுத்திக் கண்டார்.
உள்ளதும் அற்றதும் கண்டவர் மெல்ல தன்னையே எடுத்து- நிறுத்திக் கொண்டார்.
மெல்ல தன்னையே எடுத்து நிறுத்திக் கொண்டார்.
உறுதிமொழி 88
புதிய தேவதைகளை முத்தங்களிட வேண்டும்.
புதிய தேவதைகளை முத்தங்களிட வேண்டும்.
