
பரமனின் படைப்பில்
விந்தைகள் கோடி
எடுத்தியம்ப
இயலாத செயல் !
எமை நசுக்கி உயிர் வாழும் உரிமை
யார் உமக்குக்
கொடுத்தார்கள் ?
எமைப் படைத்த
இறைவனிடம்
எல்லாம் அறிந்த நீ
கேட்கக்கூடிய வினா !
எம் பிறப்பில் குறை
எதுவாக இருப்பினும்
பரம்பொருளே அதன்
மூல காரணகர்த்தா !
இதை அறிந்தால்
உன் மனம்
அமைதியில்
மடங்கி அடங்கி விடும்
புற இருள் மறைந்து
அகத்தில் ஒளி வீசும்
அவனருள் உனை
ஆட்கொண்டால் !

One Comment on “பி. ஆர்.கிரிஜா/கொசு !”
Comments are closed.