
என்னை அழைத்து எஸ் எம் ஏ ராமின் கதை பற்றி விமர்சனப் பார்வையாக சில வார்த்தைகள் கூற அழைத்ததற்கு, திரு அழகிய சிங்கருக்கும், ராமின் மனைவி திருமதி லலிதாவிற்கும் அவரது இரண்டு புதல்விகள் கார்கி மற்றும் சுகன்யாவிற்கும் மிக்க நன்றி.
இரண்டு விஷயங்களை இங்கே நினைவு படுத்த விரும்புகிறேன். கதாசிரியர் எஸ் எம் ஏ ராமும் இன்று நம்மிடையே இல்லை. கொடிய கொரோனா அவரை நம்மிடமிருந்து பறித்துக் கொண்டது. அதுவும் சமீபத்தில் தான். அதே போல இந்தக் கதையைப் படிக்கும்படி எனக்களித்த ஏஜிஸ் ஆபீஸ் ரவிச்சந்திரனும் இன்று நம்மிடையே இல்லை. சுமார் 3 வருடங்களுக்கு முன் cerebral hemorrhage இவரைத் தாக்கியது. முழுவதுமாக குணமடையாமலேயே, யாருடனும், ஒரு சிலர் தவிர, பெரிதாக interact செய்யாமலேயே நம்மிடமிருந்து அவரும் சமீபத்தில் விடைபெற்றவர். இருவரும் எனது ஆப்த நண்பர்கள். இருவரையும் almost 1978 முதல் எனக்குத் தெரியும்.
Incidentally, சுவடு பத்திரிகையில் இந்தக் கதை, “காலிங்க் பெல்”, முதன் முதலில் வெளி வந்துள்ளது, 1978ல்.
எங்களது கர்நாடக சங்கீதத்தில் இலக்ஷண சங்கீதம் இலட்சிய சங்கீதம் என்று காண்பது வழக்கம். அப்படிப் பார்த்தால் இந்த சிறுகதையை இரண்டிலுமே சேர்த்துக் கொள்ளலாம். அளவு சீரான அமைப்பு, இயல்பாக வாசகனை ஈர்க்கும் குணம், எல்லாம் உண்டு. நிறைய விஷயங்களை வாசகனை “நம்பி” எழுதப்பட்ட கதை. வெளிப்படையாகக் கூறாமல் ஊகித்தறியுமாறு பலவற்றை நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார் ராம். அதே சமயம் ஒரு உயரிய குறிக்கோளை அறிவுறுத்துவதில் கறாராக இருக்கிறது இந்தக் கதை.
சுருக்கமாகக் கதை எப்படிப் போகிறது என்று பார்ப்போம். “கதைப்பவர்” இங்கே அவரின் பெயரே இல்லை, (அது எஸ் எம் ஏ ராமேதானே), தனது நண்பன் கிருஷ்ணமூர்த்தியின் கல்யாணத்தைத் தவற விட்டதையுணர்ந்து குசலம் விசாரிக்க அவனது வீட்டிற்கு வருகிறான். இதற்கு முன் வந்த போது காலிங் பெல்லைக் கண்டு பிடிக்கச் சற்று கஷ்டப்பட்டு, துழாவ வேண்டியிருக்கிறது. அதனைக் கண்டு பிடிக்கும் சூட்சுமத்தை நண்பனிடம் இருந்து கற்றுத் தேறிவிட்டான். பெல்லை அடித்ததும் கிருஷ்ணமூர்த்தியின் மனைவி கதவைத் திறந்து விட்டு, வழிநடத்திச் சென்று அமரச் செய்கிறாள். பின் என்ன! மறைகிறாள். அடுத்து அவளது பிரத்யட்சம் ஸ்வீட்ஸ் கொண்டு வரும்போதும், தண்ணீர் சொம்பு கொண்டு வரும்போதும் தான். இதற்கிடையில் கதைப்பவர் அங்கு தொங்கும் எண்ணைக் கறை படிந்த சாடின் துணிமூலம் தான் பானுவின் தரிசனத்தைப் பெறுகிறான். அதுவும் இவள் காணாதபோது, (incognito) பானுவின் பெயர் ஒரே ஒரு முறைதான் இந்தக் கதையில் ஒரே ஒரு அழைப்பில் நமக்குக் கிடைக்கப் பெறுகிறது. கதை நிகழ்வுகள் என்றால் இது போதுமானது என்றே நான் நினைக்கிறேன்.
இனி நேரே ஆசிரியரிடம் செல்வோம்.
கதை முற்றிலுமே ஒரு விமர்சனம் தான்!
கதையை pdf document ஆக அழகியசிங்கர் கொடுப்பதாக அறிவித்திருப்பதால், நான் இங்கே bits and pieces ஆக சிலவற்றைக் கூறி, மற்றபடி முழுமையான அனுபவத்தைப், படித்துணரும் வாய்ப்பை உங்களுக்கே விட்டு விடுகிறேன். ( ” ” குறிக்குள் அடங்கியுள்ளவை நேரடியாக கதையிலிருந்து)
- காலிங்க் பெல் அறிமுகம்.காலிங்க் பெல்லும் ஒரு கதை மாந்தராக கருதப்படுகிறது. Intro to the calling bell which is also treated as a character “அந்தப் பழைய சிரமங்கள் ஏற்படவில்லை”, என்று கதைப்பவருக்கு ஏற்பட்ட முன்-அனுபவத்தை நினைவு கூர்கிறார்.
- “பிளாஸ்டிக்கின் ஸ்பரிசம்” என்கிறார். ப்ளாஸ்டிக் என்பது ஒரு ஜடப் பொருள் an inanimate thing. ஆனால் ஆசிரியருக்கு அதன் ஸ்பரிசம் கூட ஒரு பொருட்டாகத் தெரிகிறது.
- வாங்கோ என்று கூப்பிடாவிட்டாலும்…..”ஒரு வேளை அன்னிய புருஷர்களோடு பேச அவளுக்கு அனுமதிப்பட்ட வார்த்தைகள் அவ்வளவாகவே இருக்கலாம்.” இது கதைப்பவரரின் பார்வை, commentary about the condition.
4.”கிருஷ்ணமூர்த்தி இவ்வளவு உயரம் இருப்பானா?” என்று height comparisonஐ இத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் “இவள் கிருஷ்ணமூர்த்தியின் விவகாரத்திலும் இந்த அளவிற்கு தினம் குனிய வேண்டி இருக்குமே?” என்ன விஷமத்தனம் /mischief/
- “ஷேடின் நிழலைவிடப் போலி நாகரிகங்களின் நிழல்……….”. லேம்ப் ஷேடின் நிழல் மேலும் மேலும் படத்தின் மீது விழுவதால் அங்குள்ள படத்தைப் பார்க்கும் வாய்ப்பைக் குறைத்து விடுகிறது. எழுந்து பக்கத்தில் சென்று பார்த்தால் என்ன? ஆனால் போலி நாகரிகம் எனும் hypocrism இருக்கிறதே நம்மிடம். இது இவனைத் தடுத்து விடுகிறது.
- “புரை தீர்ந்த நன்மை பயக்கும் பொய்களைப் பற்றி………” இங்கு வந்திருப்பவன் நிறையவே பொய் அளக்கிறான். கல்யாணம் விசாரித்துத் தந்தி கூடக் கொடுக்க ஒழியவில்லை என்கிறான். பிறகுக் லெட்டர் போட்டிருந்தேன் என்கிறான். கிருஷ்ணமூர்த்தி ஒன்றும் வரவில்லை என்றவுடன் முழிக்கிறான். ஆக இதையெல்லாம் “நியாயப்படுத்தும் விதமாக, சாத்தானும் வேதம் ஓதும் என்பதாக பொய்கள் கூறுவது மன்னிக்கத் தக்க ஒன்றே என்கிறான்.
- “மறுபடியும் புடவைச் சரசரப்பும்……….பவுடர் வாசனையும்.” அது என்ன குடிகூரா பவுடரா என்று சற்றே சிந்தித்து, கிருஷ்ணமூர்த்தி கஞ்சன். இதை வாங்க மாட்டான் என்ற முடிவுக்கு வருகிறான். நண்பனை மதிப்பிடுவதற்கு இதனை உபயோகித்தல் ….an assessment
8 சமையல் கட்டைக் கூடத்திலிருந்து……….(முதல்) இந்த முழு பத்தியும் (para)ரசிக்கத்தக்கது. இங்குள்ள சாடின் ஸ்க்ரீன் வழியாகத்தான் பானுவைக் காண முடிகிறது. அதிலும் “தூக்கி உதட்டில் படாமல், தண்ணீர் அருந்துவதில் நிறைய சௌகரியங்கள். எந்தப் பீடிகையும் தயக்கமும் இன்றி அறிமுகங்களுக்குக் காத்திராமல் எதிரில் நிற்கிற யார் முகத்தையும் பார்க்கலாம். அவர்களுக்கும் தாங்கள் பார்க்கப்படுகிற பிரக்ஞை இருக்காது. இதுதான் அந்த சாடின் ஸ்க்ரீன் தரிசனம்
10 கதையில் நான் ரசித்த மரண அடிகள்! “பாக்கி நேரஃம் முழுவது ஒரு காலிங் பெல்லின் சமிக்ஞையாக….” வனவாசம்……..This is a sad commentary on what Banu has to forbear, depicting her pitiable condition. முதலில் வனவாசம் என்கிறார். பின் அக்ஞாத வாசமோ என்று இவருக்குத் தோன்றுகிறது. இந்தப் பத்தியையும் சற்று உரக்க, ரசித்த வண்ணம் படிக்கலாம்.
11 மெத்தை…சாந்தி முகூர்தத்திற்கு வாங்கினதா? என்று கேட்க வேண்டும் போலிருந்தாலும் “உள்ளே அவள் இருக்கும் போது தான் அதைக் கேட்பது நாகரிகமில்லை என்று எண்ணிப் பேசாமலிருந்து விட்டான். இங்கே இன்னொன்று….”(மெத்தையின்) மேலுறையை சலவைக்குப் போட்டிருக்க வேண்டும். அதற்குள்ளாகவா அத்தனை அழுக்காய் அடித்து விட்டார்கள்? அவனுக்குக் குறும்புத்தனமாய் சிரிப்பு வந்தது. mischief again
12.இன்னொரு மெத்தை தரையில் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது………….ஒரு வேளை அவர்களுக்குள் பிணக்கு ஏதாவது நேர்ந்திருக்க வேண்டும். தமிழ் சினிமாவில் வருகிற ஊடல் காட்சிகள் மாதிரி” என்ன நக்கல் இங்கே!
12 காலிங் பெல்லின் position…. “சமையல் ரூமில்.அங்கு இருந்தாத்தான் சௌகரியமாக இருக்கும்?” என்கிறான் கிருஷ்ணமூர்த்தி. fact of the matter, no further explanation is needed!
13 .”இந்த ரேழிக்கும் வாசலுக்கும் ஒரு பல்பைப் போடச் சொல்லேன். எதுவுமே அடையாளம் தெரியலை” ஆம் உன் பெண்டாட்டியின் முகத்தைக் கூட நான் சரிவரப் பார்க்கவில்லை என்று நம்மிடம் சொல்கிறார் ராம்.
14 “அவர் எதிலோ அதிருப்தியும் யாரிடமோ அனுதாபமுமாய், தெருவில் இறங்கி வீட்டை நோக்கி நடந்தான்” கதை இந்த வாக்கியத்துடன் முடிகிறது. யாரிடம் அதிருப்தி, யாரிடம் அனுதாபம் என்பதனை சொல்லித் தெரிய வேண்டுமா என்ன?
பெண்ணை ஒரு காலிங்க் பெல்லாகத்தான் இந்தக் கதை மூலம் நாம் உணர்கிறோம். நம்மை receive செய்ய வரும் எந்த ஒரு மனைவியைப் பார்த்தவுடன் பானு தான் கவனத்திற்கு வருகிறாள். இந்தக் கதையைப் படித்து உள்வாங்கியவர்களுக்குக் காலிங்க் பெல்தான் கண்முன் தோன்றும். அவளுக்கு அந்த வேலை மட்டும் போதும். ஆனால் இப்போது நிலமை மாறிவிட்டது. பெண்கள் குறிப்பாக இளம் பெண்கள், they want to participate, even assert themselves. ராமின் மறுபார்வை “review” எப்படி இருக்கும் என்று சிந்திக்கத் தோன்றுகிறது.
ராம் வெளிவட்டங்கள் என்று ஒரு நாவல் எழுதியிருக்கிறார். அது சுகன்யா என்ற ஹீரோயினை, மையமாகக் கொண்டிருக்கும். அவளை ஒரு புரட்சிப் பெண்ணாக சித்தரித்திருப்பார். எனக்கென்னமோ அவள் ஒரு தொடர்கதையின் சுஜாதாவை இதை inspiration ஆகக் கொண்டு KBயால் படைக்கப்பட்டதோ என்று மூலையில் ஒரு ஐயம். இந்த நாவல் விரைவில் வெளிவரும். மறுபதிப்பு தான். இம்முயற்சியில் அவரது இரு பெண்களும், மனைவி திருமதி லலிதாவும், கலைஞன் பதிப்பகத்தாரும், பாரவியும், கருணாபிரசாதும் அடியேனும் ஈடுபட்டிருக்கிறோம். நன்றி!

சிவகுமார் சார் அற்புதம்! என்ன போடு போடறீங்க? அன்று தங்கள் ஒலிப்பதிவு விமர்சனத்தை முழுவதும் ரசித்துக் கேட்டேன். பிராஞ்ச்சிலே நாம பணியாற்றும் போது இதெல்லாம் தெரியாமல் போச்சே. Great!
மிக்க நன்றி! எல்லாம் காலம் வரும்போது தான் தெரிய வருகிறது.
நீங்கள் சிறப்பாக இதை வழங்கினீர்கள்… அன்று இரவே இந்தக் கதை எடுத்து வாசித்தேன்
என்ன கச்சிதமான அலசல் என்று மேலும் புரிந்து கொண்டேன்.
அருமை சிவா சார்
வேணு
மிக்க நன்றி! “அலசல்” பிடித்திருந்ததை அறிய மகிழ்ச்சி. நீங்களும் அன்று திருமதி உஷா சுப்பிரமணியத்தின் கதை பற்றி நன்றாகப் பேசினீர்கள்!