அஜய் பிரதான்/நான் இப்படித்தான்

ஒடியாவில் இருந்து மொழிபெயர்ப்பு: துர்கா பிரசாத் பாண்டா

தமிழில் : அழகியசிங்கர்

தவறாக நினைக்காதீர்கள்,
நான் இப்படித்தான்.
எனக்கு
தெய்வங்களோ தேவியர்களோடே
ஏதுமில்லை.

கோவில்களை விரும்புவது மட்டும்தான்.

நான் முட்டாளல்ல, பேசமுடியாதவன்தான்.
நான் கவனக்குறைவுள்ளவனும் அல்ல,
அலைந்து திரியும் சுற்றுலாப் பயணிதான்.

சில நட்சத்திர ஒளி, சில இனிய இருள்
அதுவே எனக்குத் தேவையானது.
இந்த ஒரு சிறு பூமித் துண்டின்
கனவுக்காரன் நான்.
பணத்திற்கோ
அதிகாரத்திற்கோ ஆசைப்படவில்லை.
என் உயிர் கவிதையில் தான்.

என் வாழ்வாதாரத்திற்கு
எனக்குப் பெரிதாகப் பொருட்படவில்லை,
ஆனால் இந்த வாழ்க்கையே
முன்னிலையில் குனிந்து வணங்குகிறேன்.

நான் இப்படித்தான்.
தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்,
நான் இப்படித்தான்.

நீ என்னை மன்னிக்கலாம், மன்னிக்காமல் இருக்கலாம்
ஆனால் தயவு செய், எனக்குக் கருணை காட்டாதே.
நீ என்னைக் காதலிக்கலாம், காதலிக்காமல் இருக்கலாம்
ஆனால் என்னை மறந்துவிடாதே.

நான் வெறும் நான் தான்.
நான் இப்படியா ஆனேன் என்று
நான் எப்படித் தெரிந்துகொள்வேன்!