மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்/மகாதேவன் சிஎம்

எடப்பாடி பழனிச்சாமியின் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணம் தெளிவாக திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. அதிமுகவினர் உற்சாகமாக களத்தில் இறங்கி வேலை பார்க்கின்றனர். எடப்பாடி செல்லும் இடங்களில் எல்லாம் கூட்டணி கட்சியாக பாஜக தொண்டர்களும் கலந்து கொள்வது கூடுதல் பலம். பாஜக தன் பலத்தை காட்டுவது, அதிமுக தொண்டர்களுக்கும் கூடுதல் உற்சாகத்தை கொடுக்கும். கூட்டணிக்குள் இணக்கத்தை ஏற்படுத்தும்.

எடப்பாடியின் பேச்சும் நன்றாக தயாரிக்கப்பட்டிருக்கிறது. திமுகவின் தொடர் விமர்சனங்களுக்கு சிறப்பாக பதிலடி கொடுக்கிறார். முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி , திமுக அமைச்சர்கள் என யாரையும் விட்டு வைப்பதில்லை. எளிய மனிதனின் மொழியில் பேசுவது எடப்பாடிக்கு கூடுதல் பலம். இந்த சுற்றுப்பயணத்தை ஸ்டாலின் கிண்டல் செய்யும் போதெல்லாம், எளிமையாக பதிலடி கொடுத்து ஸ்கொர் செய்கிறார் எடப்பாடி.

“எடப்பாடி ஊர்ந்து வந்தார், தவழ்ந்து வந்தார், பறந்து வந்தார்னு சொல்றாங்க, ஆனா எப்படியோ வந்துட்டேன்ல, நீ என்னை பார்த்து பயப்படற இல்லை,”- என பேசிய பொழுது மக்களிடம் செம்ம ரெஸ்பான்ஸ். அவர் மீது வைக்கப்படும் தனிப்பட்ட விமர்சனத்தை பற்றி பேசுவதற்கும் எடப்பாடி தயங்கவே இல்லை.

அதே போல் நேற்று ஸ்டாலின் பேசும் போதும் எடப்பாடியின் சுற்றுப்பயணத்தை கிண்டல் செய்து, “சுந்தரா ட்ராவல்ஸ்” பேருந்தை போல் ஒரு பஸ்ஸை எடுத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறார் என பேசினார்.

அதற்கு பதிலடியாக, ” உனக்கென்னப்பா உங்கப்பா பணக்காரர், முதலமைச்சராக இருந்தவர், நீங்க பென்ஸ் பஸ்ஸுல போவீங்க, ஹெலிகாப்டர்ல கூட போவீங்க, இப்பலாம் தனியா பிளைட் வச்சு கூட போறீங்க. நீ கோடீஸ்வரன், நான் அப்படியா? நான் இப்படித்தான் வரமுடியும், என் நிலைமை அப்படிதான் என்று எளிமையாக கவுண்ட்டர் கொடுக்கிறார். அப்பாவியாக, ஒரு எளிய மனிதனாக தன்னை ப்ராஜெக்ட் செய்து கொள்கிறார். அது வொர்க் அவுட்டும் ஆகிறது.

கூட்டம் வருகிறது, கூட்டணி பலமாகிறது. கருத்து கணிப்புகளில் ஏறுமுகம் தெரிகிறது. தேர்தல் களம் சுவாரஸ்யமாகிறது.

பாப்போம்.