அழகிய சிங்கர்/ ஒலிபெருக்கியின் அவலம்

                              
 விருட்சம் நடத்திய கவிதை வாசிக்கலாம் வாங்க கூட்டத்தில் இன்று (18.07 . 2025 ) வாசித்த முதல் கவிதை . 

    நேற்றுப் பண்டிகை தினம்
    காலையில் தெருவில்
    ஒலிபெருக்கியின் அவலம்
    அறைக் கதவைச் சாத்தினேன்
    சன்னல்களை மூடினேன்
    இடுக்குகளில் நுழைந்தது
    ஒலிபெருக்கியின் அவலம்
    யாருடனும் பேசப் பிடிக்கவில்லை
    குழந்தைகள் கட்டுக்கடங்காமல்
    மனைவி ஏதோ காரியத்தில்
    மதியம் ஒலிபெருக்கியின் அவலம்
    சற்று ஓய
    சிறகடித்துப் பறந்தது
    மாலையில் வெளியே சுற்ற ஆரம்பித்தோம்
    கோயில்களில் வண்ண ஒளி விளக்குகள்
    திரும்பவும் ஒலிபெருக்கியின் அவலம்
    எல்லோருக்கும் ஏதோ  நடந்துகொண்டிருக்கிறது
    ஒவ்வொரு கோயிலிலும் கூட்டம்
    எங்கும் தலை
    காலெல்லாம் தேங்காய்ச் சில்லு
    அவர்கள் கோயிலுக்குள்
    காத்திருந்தேன்
    ஒலிபெருக்கியின் அவலத்துடன்
    வீடு திரும்புகையில்
    சோர்வின் தீவிரம்
    இன்று காலை
    வேறுவிதமாய்ப் பொழுது.

எஸ்ஸார்சி/தேடல் – விருட்சம் நாளிதழ்

One Comment on “அழகிய சிங்கர்/ ஒலிபெருக்கியின் அவலம்”

Comments are closed.