
18/725 கவிதைக் கூட்டம் முதல் கவிதை
மனம் ரோசக்காரன்
அறிவு பயந்தாங்கொள்ளி
மனம் சுறுசுறுப்புக்காரன்
அறிவு சோம்பேறி
மனம் குதிரை வீரன்
அறிவு சப்பாணி
மன அளவுகோலில்
கோடுகளில்லை
அறிவு அளவுகோலில்
அதுவே பிரதானம்
மனம் குருட்டுக் கிரிமினல்
அறிவு செவிட்டு அட்வகேட்
மனம் மாறும் மாற்றும்
அறிவு தேறும் தேற்றும்
மனம் காயப்பட
அறிவு ஆழப்படும்
மனம் விண்
அறிவுமண்
மனம் லேசாக
அறிவு கனக்கும்
பக்க மொரு சிறகு அவை
சிறுபுள் நீ.

2 Comments on “எஸ்ஸார்சி/தேடல்”
Comments are closed.