
18/7/25 கவிதைக் கூட்டம்
இரண்டாவது கவிதை.
ஆகாயக்குடையை
சல்லடை ஆக்கி
புகை கக்கி புகை கக்கி
பூலகைச் சூடாக்கி
பிளாஸ்டிக் புழங்கி
மண்ணை ரணமாக்கி
நச்சு நீராய்க்
கடலைக் கெடுத்து
காடுகள் கொன்று
மணல் கொள்ளை போய்
ஆறு ஏரி குளங்கள்
கால்வாய்கள்
பிளாட்டுக்களாய் உருமாறி
மண்ணை மலடாக்கி
பெரும் பேறு பெற்றவர்கள்
கூசாமல் கூவுகிறார்
இயற்கை முன்னால்
நீயும் நானும்
எம்மாத்திரம் போங்களென்று.

One Comment on “எஸ்ஸார்சி/இயற்கை”
Comments are closed.