எஸ்ஸார்சி/அவனவன்

விருட்சம் 18 07 2025, நடத்திய கவிதை வாசிப்புக் கூட்டத்தில்
நான் வாசித்த மூன்றாவது கவிதை 3.


பொக்கைக்கிழவி
பொண்ணு பாக்க
வந்தப்ப
எம்மவன்
குடிகூத்தி அறியான்
சிகரெட்டு சீட்டு
தொட்டுப்பாத்ததில்லை
சினிமா கொட்டாயி
லாட்டரி சீட்டு
மூக்குப்பொடியோட
பொயில வெத்துல
தொட்டுப்பாக்காத
தங்கத் தொரண்ணா
சோல்னா தோளிருக்க
கட்டாந்தரன்னும்
கள்ளிப்பலவன்னும்
இடுக்குக்கு இடுக்கு
கூட்டம் னு சொல்லிட்டா
கூசநாசமில்லாம
குஷாலா ஓடுற
ஆட்டுத்தாடிவச்ச
அறகொறன்னு அறியாம
தலைகுடுத்து
மாட்டிகிட்டான் நான்
கெட்ட பழக்கம்
ஒட்டு னாலும்
வூட்டுல மொடங்கி
தெளிஞ்சப்ப மொத்துனா
கொறகத ஆவும்
ஒண்ணுக்கும் ஒதவாத
வெறுவாலி
ஊரு ஊரு சுத்துதே
பெத்த முண்டம் போயிடுச்சி
கொறயும்
படுறது நான்.

எஸ்ஸார்சி/இயற்கை – விருட்சம் நாளிதழ்

One Comment on “எஸ்ஸார்சி/அவனவன்”

Comments are closed.