எஸ்ஸார்சி/காலம்

18.07.2025 அன்று நடந்த விருட்சம் கவி அரங்கத்தில் வாசித்த 4 வது கவிதை

மனிதம் புறந்தள்ளியோர்
காலச் சகதியில்
மனிதம் பேணியோர்
நிலையாய் வரலாற்றில்
ஆக்கத் தெரிந்தோர்க்கு
சோவியத்தில் காக்கத் தெரியவில்லை
வாராது வந்த
மா மணியை
ஓராது தொலைத்த பாவத்தை
மன்னிப்பார் யாவரவர்
சோவியத்துச்சிதறி சுக்கலானபோது வீசி எறியும் புத்தகக் கட்டில்
செகாவ் கோர்க்கி மாயாகாவஸ்கி
டால்ஸ்டாய் தாஸ்தாயேவஸ்கி
புஷ்கினும் இல்லாமல்
பார்த்துக்கொள் கட்டாயம் நீ
என்றான் தோழன்.

எஸ்ஸார்சி/அவனவன் – விருட்சம் நாளிதழ்

One Comment on “எஸ்ஸார்சி/காலம்”

Comments are closed.