
அழகியசிங்கரின் சொல் புதிது நிகழ்வில் ( 18 / 7 / 25 ) நான் வாசித்த என்னுடைய பத்துக் கவிதைகளை ஒவ்வொரு நாளும் ஒன்றாய்ப் பதிவு செய்ய அழகியசிங்கர் கேட்டுக் கொண்டபடி 5 ஆவது கவிதை
மானுடம் நேசித்த
மாண்பின் உச்சி.
ஆப்பிரிக்க மண்ணில்
மகாத்மா காந்தி யோடு
போராடிப்புகழ்ச்சேர்த்த
பிஞ்சு தமிழ்ப்பெண்
வள்ளியம்மை வந்துதித்த
புனித மண்.
தொடு வணங்கு
சற்று அகந்தை
இறுக்கம் தவிர்க்கட்டும்
தில்லையாடி
எல்லையாடி
வருவோம் வாயேன்.

One Comment on “எஸ்ஸார்சி/மண்”
Comments are closed.