
அழகியசிங்கரின் சொல் புதிது நிகழ்வில் ( 18 / 7 / 25 ) நான் வாசித்த என்னுடைய பத்துக் கவிதைகளை ஒவ்வொரு நாளும் ஒன்றாய்ப் பதிவு செய்ய அழகியசிங்கர் கேட்டுக் கொண்டபடி 5 ஆவது கவிதை
போன கணம் உயிரோடு இருந்தவன்
இப்போது மரித்திருக்கிறான்
மரிக்காமலும் இருக்கிறான்
நீர் ஆவியாகி விடுவது போல
காணாமல் போய் விடுகிறது காலமும்
நட்சத்திரங்களின் வயது தான் நமக்கும்
ஆனால் நம்மைப் போலன்றி
அவைகள் முது கிழவர்களாகித் தான் உதிர்கின்றன
மேலும் அவைகள் காலத்திற்குள் இல்லை
கவலைகள் அடைத்த டப்பாக்களுக்குள்ளும் இல்லை
கடவுள் சாட்சியாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்
அவருக்கு நியாயமாக துன்பம் என்பதில்லை
நாம் தான் அவரை
இழுத்து வைத்துக் கொண்டு
துன்பப் படுத்துகிறோம்
புத்தரும் சாட்சி பாவத்தில்
தான் வாழ்கிறார்
ஆனால் உன் புலம்பல்களை
செவி மடுத்துக் கொள்ளும் கருணை
அவருடையது
மலரினைப் போல
தேன் சிட்டுக்களைப் போல
ஒடும் நதிகளைப் போல நாம் வாழலாம்
பறவைகளைப் போலவும் பறக்கலாம்
நிலவினைப் போல தலைகீழாக கூட தொங்கலாம்
ஆனால் விக்கிரமாதித்தனின் வேதாளமாக
மாற வேண்டும் அவ்வளவு தான்.

One Comment on “தங்கேஸ்/காணாமல் போனவன்”
Comments are closed.