
(18 . 7. 2025 கவிதை வாசிக்கலாம் வாங்க கூட்டத்தில் வாசிக்கப்பட்ட
கவிதை 6)
அன்பில் பூத்ததொரு மலர்
இன்னும் கொய்யப்படாமலேயே இருக்கிறது
என் தோட்டத்தில்
தேன் சிட்டுகள் அலகு புதைக்கவும்
அணில் குஞ்சுகள் முகம் உரசவும்
பனித்துளிகள் பள்ளி கொள்ளவும்
மடலை விரித்தபடியே
தீண்ட வரும் விரல்கள் சிந்தும் குருதியில்
இந்த உலகின் பாவங்களை
கழுவி தீர்த்தபடியே
அது காத்துக் கொண்டேயிருக்கிறது
நேசத்தில் ஒரு கணம் முழுமையாக
வாழும் இதயம்
தன்னைப் பறித்து செல்வதற்கு

One Comment on “தங்கேஸ்/அன்பில் பூத்ததொரு மலர்”
Comments are closed.