தங்கேஸ்/உன்வருகையில்

(18 – 7 – . 2025 கவிதை வாசிக்கலாம் வாங்க கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கவிதை 7)

வருகையில்
குழல் விளக்குகளைச் சுற்றும்
ஈசல் பூச்சிகளைப் பார்த்தேன்
அது மழைக்காலம் அல்ல
ஆனால் சற்று நேரத்தில்
அங்கே மழை வந்து விட்டது

வெய்யில் தாழ கிளைகளுக்குள்
ஒளிந்து கொள்ளும்
செம்பருத்திப் பூக்களைப் பார்த்தேன்
அது அந்தி நேரம் கூட இல்லை
ஆனால் சற்று நேரத்தில்
பால் ஒளி படர்ந்தது

எவ்வளவு எழுதினாலும்
முடிந்த பாடில்லை
உன்னைப் பற்றிய கவிதைகள்

எவ்வளவு எடுத்தாலும்
தீர்ந்து விடாத ஏதோ ஒன்று
எப்போதும் இருக்கின்றது
உன்னிடம்

தங்கேஸ்/அன்பில் பூத்ததொரு மலர் – விருட்சம் நாளிதழ்

One Comment on “தங்கேஸ்/உன்வருகையில்”

Comments are closed.