
18 – 7 – . 2025 கவிதை வாசிக்கலாம் வாங்க கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கவிதை 8
ஒரு வளைந்த பிறையை வரைகிறேன்
அது நுதலைப் போல
என்கிறார்கள் கவிஞர்கள்
நுதலுக்கு மகிழ்ச்சி
பிறைக்கு வருத்தம்
பார்த்துக் கொண்டேயிருக்கிறது வானம்
ஒரு அசையும் சிறகினை வரைகிறேன்
அது கூந்தலைப் போல் இருக்கிறது
என்கிறார்கள் கவிஞர்கள்
கூந்தலுக்கு மகிழ்ச்சி
சிறகுகளுக்கு வருத்தம்
பார்த்துக் கொண்டேதானிருக்கிறது வானம்

One Comment on “தங்கேஸ்/வரைதல்”
Comments are closed.