
(18/7/2025 அன்று வாசித்த எட்டாவது கவிதை)
உலக முதல் மனிதன் என்றார்கள்
அவன் எழுத்து உலகெங்கும் என்றார்கள்
அமெரிக்கர்கட்கு மிகவும் பிடித்த மாமேதை என்றார்கள்
மாற்று உடைக் கூட கையில் இல்லாத
எளிமையின் திரு உரு என்றார்கள்
படைத்த பெரிஸ்ட்ரோய்க்கா புத்தகத்தைத் தத்தம்
மொழிகளில் ஆக்கிப்
புகழ்ந்துமே பூரித்தார்கள்
போப்போடு ஜோடியாய்
புகைப்படத்தில் சிரித்து நிற்பதைக்கண்டதும்
கண்களில் ஒற்றிக்கொண்டே சென்றார்கள்
காலச் சகதியில் தலைகவிழ்ந்து அமர்ந்தபடியாய்
கோர்பசேவ் பாரேன்
அவனே தான்.

One Comment on “எஸ்ஸார்சி/கவிழ்தலை”
Comments are closed.