எஸ்ஸார்சி /சுயங்கள்

எஸ்ஸார்சி வாசித்த ஒன்பதாவது கவிதை

வரம்பற்ற போனசோடு
ஊதியக் குழுவில்
ஏகத்துக்கும் சாதித்த
தலைவரின் வருகை
தலைநகரில்
ஆயிரம் ஆயிரமாய்
பட்டாசு வெடித்துக்
கட்டித்தழுவினர்
களிப்பு மிகுதியில்
முன்னிரவுக் குளிரில்
புகை நெளிய
வேர்க்கடலை வறுத்துச்
செல்பவனின் கால் பார்த்துக்
கெஞ்சிக்கரைந்தபடி
அம்மணமாய் அலையும்
அவளுக்கு ஐந்து வயதிருக்கும்
வண்டியை நகர்த்தினான் காறி உமிழ்ந்து
கூட்டமுடியுமுன்னே
போணி ஆவுணும்
குறுக்காக வருது சனியன்.

எஸ்ஸார்சி/கவிழ்தலை – விருட்சம் நாளிதழ்

One Comment on “எஸ்ஸார்சி /சுயங்கள்”

Comments are closed.