நாகேந்திர பாரதி/ஒத்தைப் பனைமரம்

அழகியசிங்கரின் சொல் புதிது நிகழ்வில் ( 18 / 7 / 25 ) நான் வாசித்த என்னுடைய பத்துக் கவிதைகளை ஒவ்வொரு நாளும் ஒன்றாய்ப் பதிவு செய்ய அழகியசிங்கர் கேட்டுக் கொண்டபடி 7 ஆவது கவிதை

கள்ளு இறக்கிய காலத்தில்
காத்துக் கிடந்தவர் பல பேர்

கதிர் அறுத்த காலத்தில்
கஞ்சி குடித்தவர் பல பேர்

காஞ்சு போன காலத்தில்
மட்டை உரித்தவர் பல பேர்

உறிஞ்சு விழும் சட்டத்தில்
முதுகு சொறிந்தவர் சில பேர்

கூட இருந்த பனையெல்லாம்
விறகாகவும் வீடாகவும்

ரோடு தெரிகிறது
பஸ் சப்தம் கேட்கிறது

பஸ்சுக்குள் ஒரு பையன்
கை அசைப்பது தெரிகிறது

ஒத்தைப் பனை மரம் இன்னும்
எத்தனை நாளைக்கு

நாகேந்திர பாரதி/கத்தாழை முள் – விருட்சம் நாளிதழ்

One Comment on “நாகேந்திர பாரதி/ஒத்தைப் பனைமரம்”

Comments are closed.