நாகேந்திர பாரதி/ நம்பிக்கை

அழகியசிங்கரின் சொல் புதிது நிகழ்வில் ( 18 / 7 / 25 ) நான் வாசித்த என்னுடைய பத்துக் கவிதைகளை ஒவ்வொரு நாளும் ஒன்றாய்ப் பதிவு செய்ய அழகியசிங்கர் கேட்டுக் கொண்டபடி 9 ஆவது கவிதை

வண்ணப் பூக்கள் எல்லாம்
வாசம் வீசுவதில்லை

வாசம் வீசும் பூவிலும்
விஷத்தின் தன்மை உண்டு

புறத்தில் சிரிப்பவர் எல்லாம்
அகத்தில் மகிழ்பவர் அல்லர்

ஆராய்ந்து நம்பிக்கை வைத்தால்
அடிகள் சறுக்குவதில்லை

நம்பிக் கெட்டவரும் உண்டு
நம்பாமல் கெட்டவரும் உண்டு

நாகேந்திர பாரதி/ஒத்தைப் பனைமரம் – விருட்சம் நாளிதழ்


One Comment on “நாகேந்திர பாரதி/ நம்பிக்கை”

Comments are closed.