அழகியசிங்கரின் சொல் புதிது நிகழ்வில் ( 18 / 7 / 25 ) நான் வாசித்த என்னுடைய பத்துக் கவிதைகளை ஒவ்வொரு நாளும் ஒன்றாய்ப் பதிவு செய்ய அழகியசிங்கர் கேட்டுக் கொண்டபடி 10 ஆவது கவிதை

நிற்கும் பொம்மைகளிடம்
கதைகள் இருக்கின்றன
படுக்க வைக்கப்படும் போது
பகிர்ந்து கொள்ளப் படும்
மண்ணாக இருந்த காலத்தின்
மகிழ்ச்சிக் கதைகள்
கேட்கும் அம்மாவுக்கும்
கண்கள் கசியும்
மணமான காலத்திற்கு
முன்பிருந்த நிலை நினைத்து
