
அழகியசிங்கரின் சொல் புதிது நிகழ்வில் ( 18 / 7 / 25 ) நான் வாசித்த என்னுடைய பத்துக் கவிதைகளை ஒவ்வொரு நாளும் ஒன்றாய்ப் பதிவு செய்ய அழகியசிங்கர் கேட்டுக் கொண்டபடி 6 ஆவது கவிதை
காட்டுக் கத்தாழையைச்
சாடசியாய் வைத்துக்
கீறிய பெயர் காட்டிக்
காதல் என்றேன் நான்
வடிந்த பால் காட்டிக்
கண்ணீர் என்றாய் நீ
செடிக்கும் வலிக்கும்
சேதியும் புரிந்தது
உனக்குள் இருக்கும்
மென்மையும் புரிந்தது
மனதிற்குள் கத்தாழை
முள்ளாய்க் குத்தியது
நாகேந்திர பாரதி/தொலைந்து போனவை – விருட்சம் நாளிதழ்

One Comment on “நாகேந்திர பாரதி/கத்தாழை முள்”
Comments are closed.