
அழகியசிங்கரின் சொல் புதிது நிகழ்வில் ( 18 / 7 / 25 ) வாசித்த பத்துக் கவிதைகளை ஒவ்வொரு நாளும் ஒன்றாய்ப் பதிவு செய்ய அழகியசிங்கர் கேட்டுக் கொண்டபடி 5 ஆவது கவிதை
அடுப்புச் சுவற்றில்
சமையல் புகையின்
கறுப்புக் கோலம்
மரக் கதவில்
கீறிச் செதுக்கிய
மனித உருவம்
மாடப் பிறையில்
சிந்திக் கிடந்த
சித்த நாதன் விபூதி
திண்ணைச் சிமெண்டைத்
தேய்த்துக் கிடந்த
கோரைப் பாய்கள்
கோடி ரூபாய்க்கு
விற்ற வீட்டோடு
தொலைந்து போயின

One Comment on “நாகேந்திர பாரதி/தொலைந்து போனவை”
Comments are closed.