நாகேந்திர பாரதி/வீட்டுத் திண்ணை

அழகியசிங்கரின் சொல் புதிது நிகழ்வில் ( 18 / 7 / 25 ) நான் வாசித்த என்னுடைய பத்துக் கவிதைகளை ஒவ்வொரு நாளும் ஒன்றாய்ப் பதிவு செய்ய அழகியசிங்கர் கேட்டுக் கொண்டபடி 4 ஆவது கவிதை

பசுஞ்சாணி பூசிவிட்டு
மண்ணை மெழுகி விட்டு

வீட்டோரத் திண்ணைக்கு
கோலமும் போட்டு வச்சா

ஊருக்கு விருந்தாளி
வந்தாக்க உட்கார்ந்து

ஆசுவாசம் செய்றதுக்கு
அரட்டை நடிக்கிறதுக்கு

சாராய வாசனையோடு
சீட்டுக் கட்டோடு

சாயந்திரம் வந்தார்கள்
அயலூர்ப் பெருசுகள்

மறுநாள் திண்ணை
வெறும் மண் திண்ணை

நாகேந்திர பாரதி/பசி அறிந்தவன் – விருட்சம் நாளிதழ்

One Comment on “நாகேந்திர பாரதி/வீட்டுத் திண்ணை”

Comments are closed.