18/7/2025 அன்று எஸ்ஸார்சி வாசித்த பத்தாவது கவிதை

நம் கஷ்டம் நம்மோடு
கள்ள விழியாய்
மார்க்சியர்கள்.
அநேகமாய் மார்க்சியர்கள்
முழுவதுமாய்
பெற்ற மக்களை
மார்க்சுக்குத் தெரியாதபடி
ஒளித்துக் கொண்டு
மார்க்சின் தலைமுறைகள்
எப்படியோ ஜெர்மனியில்.
தமிழ் மண்ணில்
தாய்மொழியை
தமிழ்ச் சொல்லை மறந்துபோய்
உதிர்த்தாலும்
சொல் ஒன்றுக்கு ரூபாய் பத்து அபராதம்
மகனுக்காய் மகளுக்காய்
கட்டும் எனக்குத் தமிழ்
எழுத்தாளர் மையத்துத்
தலைவர் மகுடம்
அப்பள்ளி தாளாளர் தயவில்.
பற்கள் அத்தனையும்
வெளித் தெரியலாம் கள்ள
மற்றவை அவை.
