18 – 9. 2025 கவிதை வாசிக்கலாம் வாங்க கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கவிதை 4

பூக்கும்
நூறு பூக்கள்
கிளையை சொந்தம் கொண்டாடுகின்றன
ஆனால் கிளை சொந்தம் கொண்டாடுவதென்னவோ
வெறுமையைத்தான்
ஒவ்வொரு நாளும் ஒரு மோனப் புத்தனை
அதில் தான் தரிசிப்பேன்
பதிலுக்கு அவனும்
ஒரு பற்றற்ற புன்னைகயை உதிர்ப்பான்
மனிதர்களின் நன்றிகெட்ட தனங்களை
நினைக்கையிலே
அற்ப துரோகங்களை அறிகையிலே
நான் அமைதியாக ஒரு கிளையின்
கீழ் தான் நிற்கிறேன்
அது சருகுகளை அட்சதையாக
தலை மீது தூவி
அந்த கடவுளைப் போல
ஆசிர்வதிக்கிறது
அத்தனை ஆழமாக
