
18.07.2025 அன்று நடந்த விருட்சம் கவி அரங்கத்தில் நான் வாசித்த நான்காவது (4) கவிதை.
நான் நல்லவனாக இருக்க வேண்டும்
நான் வல்லவனாக இருக்க வேண்டும்
நான் உத்தமனாக இருக்க வேண்டும்
நான் நேர்மையுள்ளவனாக
இருக்க வேண்டும்.
மற்றவர்களை மாற்றும் முயற்சியைவிட
நான் மாற வேண்டும்
போகும் வழியெங்கும் இடர்பாடுகளை நீக்கி
மற்றவருக்கு வழிகாட்ட வேண்டும்.
என் பாதை பலருக்கு வழிகாட்டிட வேண்டும்
என் பயணம் பலரும் இலக்கை அடையும் நேர்த்தி வேண்டும்.

One Comment on “சுரேஷ்ராஜகோபால்/நான் – என் குறிக்கோள்”
Comments are closed.