
விருட்சம் கவிதை வாசிப்பு,18 05 2025, நான் வாசித்த, எனது ஐந்தாவது கவிதை .
ஒரு குவளை தண்ணீரை கவிழ்த்தான்
மற்றொரு குவளையில்,
அந்த குவளை நிரம்பியது.
மறுபடி அந்த நிரம்பிய
குவளையை முதல் குவள்யில்
கொட்டினான் கீழே சிந்தாமல்.
இப்படியே மறுபடி மறுபடி
செய்து கொண்டே இருந்தான்
திருப்தி தரவேயில்லை.
நேரம் மட்டும் போனது
பொழுது போக வேண்டாமா?
அவனுக்கு வேறென்ன வேலையிருக்கு?
வேலை கிடைக்கவில்லை
விரக்தியில் விபரீதம்
வீணான காலம்
பயனற்று போச்சு.
