
18.07.2025 அன்று நடந்த விருட்சம் கவி அரங்கத்தில் வாசித்த 4 வது கவிதை
புகைப்படத்தைப் பார்த்தேன்
எந்தக் கணத்தில்
எந்தத் தருணத்தில்
சட்டமிட்டதுபோல் காட்சிக்குள்
புகைப்படத்தில்
ஆடியில்
பார்க்கும் முகம்
எந்தக் கணத்தில்
எந்தத் தருணத்தில்
புகைப்படம் கையில்
சட்டமிட்டது சதுரமானது
பாட்டிச் சாவதற்குமுன்
புகைப்படம் எடுத்தேன்
அந்தக் கணத்தில்
அந்தத் தருணத்தில்
சட்டமிட்டது
சதுரமானது

One Comment on “அழகியசிங்கர்/ புகை மண்டலம் : இரண்டு”
Comments are closed.