
18.07.2025 அன்று நடந்த விருட்சம் கவி அரங்கத்தில் வாசித்த 3 வது கவிதை
அலுவலகத்தில்
புகை ஊதியபடி
பார்த்தேன்
யூனியன் தலைவரை
நீண்ட மீசையுடன்
விரைந்து செல்ல
அவர் விரைப்பு
புகையிலும்
யாரும் எதுவும் சொல்லாமல்
புகைத்தேன்
நண்பர்கள் சகிதம் புகைப்பதால்
பழக்கமில்லை புகைப்பது
மூக்கினுள்ளும்
வாயின் வழியாகவும்
ஊதிய புகை
அலுவலக நண்பரொருவர்
புகை கண்வழியே கையைச் சுட்டார்
சங்கரன் புகைப்பான்
அவனுடன்
கற்பனை கலந்த புகை
வீணானது ஒன்று
வாய் நாற்றம் மிச்சம்
என்பார் அச்சகத்திலிருப்பவர்
புகை மண்டலங்களுக்கிடையே
எப்போதும்
அன்று வந்த அந்தோனி
பையன் எதிரில் புகை ஊதினார்
மரபை மீறுவதாய்
ஊதி ஊதி
இலக்கியக் கூட்டத்தில் பேசினார்
அப்துல் மாலிக் தனியாய்க் கடையில்
நின்று புகைப்பார்.
ஒன்றோ இரண்டோ
அவருடன் இருப்பவர் யாரையும்
வற்புறுத்தாமல்
பார்த்தால் புகைப்பது
தெரியாது
உடன் பிறந்தவன் புகையை விழுங்குவான்
தாகத்திற்கு நீர் அருந்துவதுபோல.

One Comment on “அழகியசிங்கர்/புகை மண்டலம் : ஒன்று”
Comments are closed.