அழகியசிங்கர்/ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 96

ஆசிரியர் பக்கம்

மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
 மோகினி: வணக்கம்.
அழகியசிங்கர் : வணக்கம். 
ஜெகன் :  நேற்று அந்திமழை கூட்டத்தில் கலந்து கொண்டீர்களா?
அழகியசிங்கர் : கலந்துகொண்டேன். கூட்டம் சிறப்பாக நடந்தது.
மோகினி :  மேடையில் கதைகளைப்பற்றி உரையாடும்போது பாக்கியம் சங்கர் உங்கள் கதையைப் பற்றிக் கூறியது மகிழ்ச்சியாக இருந்தது.
அந்திமழை இளங்கோவன் எழுதிய கனவுப் படிக்கட்டுகள் புத்தகம் கூட வெளியிட்டார்கள். 
ஜெகன் : ஆமாம். நீங்கள் கவிதா முரளிதரன், பாக்கியம் சங்கர் பார்த்து என்ன சொன்னீர்கள்?
மோகினி :  என்ன சொல்லியிருக்கப் போகிறார்? எப்படி என் கதையைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்று சொல்லியிருப்பார்.
அழகியசிங்கர் :உண்மைதான். 300க்கும் மேற்பட்ட கதைகள் வரும்போது அவர்கள் மனதில் தேர்ந்தெடுக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றியிருக்க வேண்டும்.  என் கதை அதிர்ஷ்டம் செய்திருக்கிறது.
ஜெகன் :  நீங்கள் கலந்துகொண்ட போட்டிகளில் அந்திமழை தவிர வேற எந்தப் போட்டிகளிலும் உங்கள் கதைத் தேர்ந்தெடுக்கப் படவில்லை.
அழகியசிங்கர் :  உண்மைதான். மிகக் குறைவான கதைகளைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். அதனால் அப்படி இருக்கும்.
மோகினி :  இதற்கு ஒன்றும் செய்ய முடியாது.
அழகியசிங்கர் : ஆமாம்.ஒன்றும் செய்ய முடியாது. நம் கையில் எதுவுமில்லை.
மோகினி :  அசோகமித்திரன் பெயரில் வைத்த போட்டியில் நீங்கள் செய்தது சரிதான்.
அழகியசிங்கர் : இரண்டு பிரிவுகளாகக் கதைகளைப் பிரித்து விட்டேன்.  ஒன்று தீவிரமான கதைகள். இன்னொன்று பத்திரிகைகள் கதைகள். தீவிரமான கதைகள் 23. பத்திரிகைக் கதைகள் இதுவரை 50.
ஜெகன்:  சமீபத்தில் கும்பாபிஷேகத்திற்காக அசிக்காடு கிராமம் சென்றீர்கள்..யாராவது எதிர்ப்பு தெரிவித்தார்களா?
அழகியசிங்கர் : யாரும் தெரிவிக்கவில்லை.  ஆனால் பெரியப்பா குடும்பத்தில் உள்ள உறவினர்கள் பேசவில்லை. 
மோகினி : நீங்கள் பேச முயலவில்லையா?
அழகியசிங்கர் : முயற்சி செய்தேன்.  ஆனால் பலன் அளிக்கவில்லை. அவர்கள் மனதில் தங்கியிருக்கும் கோபம் போகவில்லை.
மோகினி : யாரோ எதையோ சொல்லியிருப்பார்கள்.  அவர்கள் யாரும் கதைகளைப் படிப்பவர்கள் இல்லை.  நீங்கள் எழுதுகிற எழுத்தைப் படித்திருக்கவே மாட்டார்கள்.
அழகியசிங்கர் : உண்மைதான்.
மோகினி : இரவு  9.10 மணி ஆகிவிட்டது. கூட்டத்தை முடித்துக் கொள்ளலாம்.
அழகியசிங்கர் : குட் நைட்.

                    (இரவு 09.10 மணி)