சுரேஷ்ராஜகோபால்/சுமைகள்

விருட்சம் 18 07 2025, நடத்திய கவிதை வாசிப்புக் கூட்டத்தில்
நான் வாசித்த மூன்றாவது கவிதை 3.

*
தூக்கிச் சுமந்த
சுமைகளின் பாரம்தான்
உடலைப் படுத்தும்
மனதைப் படுத்தும்.

பஞ்சு பொதியாகினும்
பாராங்கல் சுமையாகினும்
சுமை சுமைதான்
வலி சுமப்பவனுக்கே தெரியும்.

வாழ்வே ஒரு சுமைதான்
மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட்டால்
சுமையும் சுகமாகும்
ஆனந்தம் அதுதானே.

சுரேஷ்ராஜகோபால் /மயிலிறகு – விருட்சம் நாளிதழ்

One Comment on “சுரேஷ்ராஜகோபால்/சுமைகள்”

Comments are closed.