சுரேஷ்ராஜகோபால் /மயிலிறகு

விருடசம் 18 07 2025 வாசித்த கவிதை 2

எனக்கு சிறுவயது முதல்
ஒரு பழக்கம்
எல்லாப் புத்தகத்தின்
ஐம்பதாம் பக்கத்துல்
மயிலிறகு வைத்துக் கொள்வேன்
அதொரு அலாதி சுகம்.

நேற்று நள்ளிரவில்
அனைத்தும் காணமல்
போவது போல
கனவு கண்டேன்.

விடிந்ததும் தேடவேண்டும்
என்னை விட்டு
போகாது அவைகள்.

சுரேஷ்ராஜகோபால்/கோபக்காரன் – விருட்சம் நாளிதழ்