சுரேஷ்ராஜகோபால்/கோபக்காரன்

கவிதை வாசிக்கலாம் வாங்க நிகழ்ச்சியில் இன்று 18 07 2025, படித்த என் கவிதை:->

கோபக்காரனுக்கு
வேகம் சொற்களிலா?
இல்லை
எதிரில் இருக்கும் மனிதன் மேலா?
சொற்கள் நெஞ்சினில் புதைந்திருக்குமா தெரியாது.
அடுக்கடுக்காக பாய்ந்துவரும்
எதிராளி காயம் பட்டானா?
துவண்டு போனானா?
கவலையில்லை அவனுக்கு
இவன் கோபம்
வடிந்தால் போதும்.

தங்கேஸ்/சுமைகள் – விருட்சம் நாளிதழ்