
அழகியசிங்கரின் சொல் புதிது நிகழ்வில் ( 18 / 7 / 25 ) நான் வாசித்த என்னுடைய பத்துக் கவிதைகளை ஒவ்வொரு நாளும் ஒன்றாய்ப் பதிவு செய்ய அழகியசிங்கர் கேட்டுக் கொண்டபடி 2 ஆவது கவிதை
இந்த வருஷமும்
தவறாமல் வருகை தந்த
கூழைக்கடா, கொக்கெல்லாம்
தேடிப் பார்த்தாலும்
பச்சைப் பயிராக
ஒண்ணுத்தையும் காணோம்
உள்ளூரில் கஷ்டப்படும்
உழவன் வயிற்றையே
மதிக்காத மேகமெல்லாம்
கருப்பாக மாறாது
ஊரு விட்டு ஊரு வந்த
பறவையின் பசிக்காக

One Comment on “நாகேந்திர பாரதி/கருக்காத மேகம்”
Comments are closed.