நாகேந்திர பாரதி/முடியாத வேண்டுதல்

(அழகியசிங்கரின் சொல் புதிது நிகழ்வில் ( 18 / 7 / 25 ) வாசித்த பத்துக் கவிதைகளை ஒவ்வொரு நாளும் ஒன்றாய்ப் பதிவு செய்ய அழகியசிங்கர் கேட்டுக் கொண்டபடி முதல் கவிதை)

கண்மாய்க் கரை மேட்டிலே
கருத்த முனுசாமிக்குத்
தேங்காய் உடைக்கணும்

ஊர்க்கோயில் சனீஸ்வரனுக்கு
மாசம் பூரா சனிக்கிழமை
எண்ணை விளக்குப் போடணும்

குலதெய்வம் கோயிலுக்கு
அந்த வருஷம் வயித்திலே
மாவிளக்கு வைக்கணும்

சிறுசுகளின் நோய் நொடிக்கு
ஒவ்வொரு கோயிலிலும்
வேண்டுதலை முடிச்சுட்டா

பாடையிலே ஏத்து முன்னே அவுத்த
பச்சைச் சேலையிலே
முடிஞ்சு வச்ச ஒரு ரூபாய்

எந்தச் சாமிக்கு, எந்தப் புள்ளைக்காக,
சொல்லாமப் போய்ச் சேர்ந்தா
சுடுகாட்டுக்குப் பெரியாயி

2 Comments on “நாகேந்திர பாரதி/முடியாத வேண்டுதல்”

Comments are closed.