அழகியசிங்கர்/அந்திமழை கொடுத்த கௌரவம்..

அந்திமழை மாத இதழ் சிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழா புத்தக வெளியீட்டு விழா, சென்னை கே.கே நகர் டிஸ்கவரி புக் பேலஸில் நேற்று (19.07.2025) நடைபெற்றது.

இவ்விழாவில் அந்திமழை அசோகன் வரவேற்புரை. சரஸ்வதி இளங்கோவன் முன்னிலையில் எழுத்தாளர் இமயம் அவர்களுடன் கலந்து கொண்டு அந்திமழை இளங்கோவன் அவர்கள் எழுதிய ‘கனவுப்படிக்கட்டுகள்’ நூலினை வெளியிட்டார்கள்.
அந்திமழை இளங்கோவன் நினைவு சிறுகதை போட்டியில் 2025 வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்துக் கௌரவப் படுத்தினார்கள்.

சிறப்புப் பெற்ற எழுத்தாளர்களில் நானும் ஒருவன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் கதையின் லிங்கைத் திரும்பவும் பதிவிடுகிறேன்.

https://www.andhimazhai.com/literature/short-stories/suvar