
( சொல் புதிது நிகழ்வில் ( 18 / 7 / 25 ) வாசித்த 9 ஆவது கவிதை )
காற்றைப் பற்றி யாரென்ன
சொல்ல இயலும்
காற்றால் நாமெல்லாம்
காற்றின் அழுத்தத்தால்
முருங்கை ஒடிந்து
கிளைகள் முறிந்து
பச்சிலைகளுடன் முருங்கைப் பூக்கள்
சற்றுமுன் ஜீவனுள்ளச் சிற்றெரும்பு
எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தால்
காற்றை விட்டது
எல்லோரிடமும் தொடர்ந்து இயங்கும்
காற்றைப் பற்றி யோசிக்காமல்
காற்றைச் சுவாசித்து
காற்றால் எழுதுகிறோம்
உணர்வுகளைக்
காற்றை உட்கொண்ட
மனிதர்கள் அறிவார்
வலிமைமிக்க ஆயுத வெறியால்
மனித உடல்கள் சரிந்தாலும்
ஒரு காற்று
இன்னொரு காற்றை வீழ்த்துவதுபோல்

1yc63x