
தமிழில் : க. மோகனரங்கன்
உலகம் நல்லதாகவும்
அழகானதாகவும்
கனிவுடையதாவும்
மாறுவதற்காக
காத்திருந்ததில்
மிகவும் சோர்ந்துவிட்டேன்,
நீங்களும்தான் இல்லையா?
நாம் ஒரு கத்தியை எடுத்து
இந்த உலகத்தை
இரண்டாக வெட்டுவோம் –
தடித்த தோலுக்குள் புழுக்கள்
எதைச் சாப்பிடுகின்றன
என்று பார்ப்போம்.
