
ஒரு நாள் நானும் என் மனைவியும் அது எந்தத் தேதியில் என்று மறந்து விட்டது. கடந்த மாதம், ஏதோ ஒரு நாள் மாலையில் நாங்கள் கடற்கரையிலமர்ந்து கொண்டிருந்தோம். பரஸ்பரம் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தோம். உண்மையில் நாங்கள் உட்கார்ந்து கொண் டிருக்கவில்லை. ஒரு கல்லில் சாய்ந்து நின்று கொண்டிருந்தோம். கடல் அரிப்பைத் தவிர்க்க நடப்பட்ட கற்கள் ஒன்றில் சாய்ந்தபடி இருந்தோம். பொதுவாக நானும் என் மனைவியும் சூரியன் மறையும் வரை கடற்கரையில் சுற்றி நடப்பதே வழக்கம். மறைந்த பிறகு எங்கே யாவது ஜனக்கூட்டம் இல்லாத இடத்தில் அமைதியாக உட்காருவோம். ஆனால் அன்று அதற்கு இயலவில்லை. வேறொன்றுமில்லை அன்று ஒரு விரும்பத் தகாத நிகழ்ச்சி நடந்தது. அதன் பிறகு பல நாட்கள் என் மனைவி கடற்கரைக்கே வரவில்லை. எனக்கும் சோம்பலாய் இருந்தது. பிறகு எல்லாவற்றையும் மறந்தோம். மறதி ஒரு கொடை தான். ஒரு விதத்தில் பார்த்தால் மறதி இல்லாவிட்டால் மனுஷனுக்கு பைத்தியம் பிடிக்க வாய்ப்புண்டு. நினைவு பிழன்று பைத்தியம் பிடிப்பதில்லையா? நீங்க என்ன சொல்றீங்க?
நினைவு இறந்தகால அனுபவத்தைப் பற்றியோ எதிர்கால ரகசியத்தைப் பற்றியோ ஆகலாம் அல்லவா? எதிர்காலத்தை மறக்க முடியாமல் வேதனைப்படுபவர்களும் இருக்கிறார்களே? அன்றைக்கு என்ன நடந்தது தெரியுமா? ஆ… அன்றைக்கு பகல் முழுவதும் மழையாயிருந்தது. மாலையில்தான் வானம் சிறிது வெளுத்தது. கல்லின்மேல் சாய்ந்து நின்று – தரை ஈரமாக இருந்தது – நானும் என் மனைவியுமாக ஏதேதோ விஷயங்களைப்பற்றி விவாதித்துக் கொண் டிருந்தோம். அவளோடு பேசும்போது இப்படித்தான். வாய் திறந்தால் தஞ்தான் பேசுவாள் அவளுக்கு அறிவில்லை என்று அர்த்தமல்ல. ஆனாலும் அன்று அவள் முதலிலிருந்தே மடத்தனமாகவே பேரிக் கொண்டிருந்தாள். நான் அதையெல்லாம் இடைமறித்துக் கொண்டே யிருந்தேன். சோதனைக் குழாய்களில் மனிதக் குழந்தைகளை உருவாக்கு வதைப் பற்றிய பொய்ச் செய்தியை ஏதோ பத்திரிகையில் படித்ததைப் பற்றி என்னிடம் அவள் சொல்லிக் கொண்டிருந்டிருந்தோம். அவனோடு பேசும்போது இப்படித்தான். வாய் திறந்தால் தான் பேசுவாள், அவளுக்கு அறிவில்லை என்று அர்த்தமல்ல, ஆனாலும் அன்று அவன் முதலிலிருந்தே மடடத்தனமாகவே பேசிக்
கொண்டிருந்தாள். நான் அதையெல்லாம் இடைமறித்துக் கொண்டே யிருந்தேன். சோதனைக் குழாய்களில் மனிதக் குழந்தைகளை உருவாக்குவதைப் புற்றிய பொய்ச் செய்தியை எதோ பத்திரிகையில் படித்ததைப் புற்றி என்னிடம் அவள் சொல்லிக் கொண்டிருந்தாள்.
“அடி போடி, ஆராய்ச்சிக் கூடங்களில் குழந்தைகளைப் பிறக்க வைத்தால் அவை அக் கூடங்களில் உருவாக்கப்படும் வேறு பல பொருட்கள் போலாகி விடாதா? பெயரும் நம்பரும் எழுதி ஒட்டப்பட்ட கலவைகளின் குவியல் போல, அவற்றையெல்லாம் விற்பனைக்கு வைக்கலாம். இல்லாவிட்டால் மனநல விடுதி போன்ற இடங்களில் அடைத்து வைக்க வேண்டியிருக்கும்!’
“அதோ வருகிறான் ஒரு பைத்தியக்காரன்!” என்றாள் அவள். என்னால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இது அவளுடைய வழக்கமான செயல்தான். ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி அனா வசியமாக வாதிடுவாள். நான் அதை ஒன்றுமில்லாமல் ஆக்கும் போது விஷயத்தை மாற்றுவாள்.
“உன்னுடைய பைத்தியக்காரனைக் கொண்டு போய் தூக்கில் போடு -நெருப்பில் போட்டுப் பொசுக்கு. இனிமே நீ என்னிடம் பேசாதே!” என்றேன் நான்.
“பாவம் செத்துருவான் போல இருக்கான், பாருங்க!” அவனைச் சுட்டிக் காட்டியபடி சொன்னாள். செவிடன் காதில் யார் சங்கு ஊது வார்கள்? நான் அவள் காட்டிய திசையில் பார்த்தேன். சிறிது தொலைவில் ஒரு மனிதன் தலைகுனிந்தபடி மணலில் அமர்ந்திருந்தான். இரண்டு கைகளாலும் தலையைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு தரையைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
“பைத்தியமில்லை. ஏழை. பட்டினியாய் இருக்கும்.’
காட்டி தனக்குத்தானே ஏதோ சொல்லிக் கொண்டே வந்தான்.” ‘இல்லை. கிறுக்கன்தான். நடந்து வந்த போது கடலைக் “தற்கொலை ஏதாவது பண்ணிக்கப் போறானோ என்னமோ?” அபத்தமாக நான் சொல்லி விட்டேன். என் தவறுதான். மனிதர்களைத் தரம் பிரித்து பல மாதிரிகளாகப் பகுப்போமே நாம். கதைகளிலும் மேலும் நம்முடைய குறுகிய உலக அனுபவத்திலும் கிடைத்த சில மாதிரிகளை உணர்ந்து கொண்டால் உடனே தரம் பிரித்தலே நம் வேலை. “எனக்குத் தெரியும் அப்படிப்பட்டவன் தான்” என்றும், “ஓ அப்படியானவன்தானே” என்றும் இப்படியாகச் சொல்லும் நமது வகைப்படுத்தல். ஒப்புமை நோக்கி உடனே விதிமுறைகளாலான வாளெடுத்து வீசுகிறோம். அவனைப் பார்த்த போது எனக்குத் துன்பியல் கதைகளின் நாயகர்களே நினைவுக்கு வந்தார்கள். அதனால்தான் நான் அப்படி அபத்தமாகச் சொல்லி விட்டேன். ஏனெனில், என் மனைவி அவ்வாறு கேட்கவே விரும்பினாள்.
‘அவன் தற்கொலை செய்யத்தான் வந்தானென்று தீர்மானிக்க என்ன காரணம்? அவன் என்ன செய்தான்’ என்று கேட்கிறீர்களா? ஆ…. அதற்குள் அவன் எழுந்து நின்றிருந்தான். தூங்கி…. வழிவது போல ஆடியபடி அவன் ஆகாயத்தைப் பார்த்தான். சிறிது நேரம் அங்கேயே நின்றான். சின்ன வயசுதான் அவனுக்கு. முகத்தில் மீசை வளர்ந்திருந்தது. கலைந்த தலைமுடி. அவன் பயத்தால் வெளிறிக் கொண்டிருந்ததை அவனுக்கு அருகில் சென்றபோதுதான் நான் உணர்ந் தேன். ஆடைகள் அவன் உடலோடு ஒட்டியிருந்தன. காலையில் பெய்த மழையில் நனைந்திருக்கலாம். வியர்த்திருக்க வாய்ப்பில்லை.
ரொம்ப நாளாகவே எனக்கு படுக்கையில் படுத்தபடி வாசிக்கும் பழக்கம் இருந்தது. வாசிப்பு இல்லையென்றால் அப்புறம் அறிவு எப்படிக் கிடைக்கும்? அந்தப் பழக்கத்தினாலேயோ என்னவோ கண் பார்வை மங்கலாக இருக்கிறது. அது மட்டுமில்லாம வயசும் கூடுதில்லையா? இப்போதெல்லாம் வாசிப்பதேயில்லை. என் மனைவி தூங்கும் போது கண்ணில் வெளிச்சம் விழுவதை விரும்ப மாட்டாள். நான் சொல்ல வந்தது இதுதான். பார்வைக் குறைபாட் டால் நிச்சயமில்லை என்றாலும் அவன் அழுது கொண்டிருந்த தாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. ஆமாம் ‘ஒரு ஆண் அழுவதா?’ சந்தேகமில்லை. என் மனைவி சொன்னது நினைவுக்கு வருகிறது. “முழு பைத்தியம்தான். பட்டப் பகலுல நின்னுக்கிட்டு கண்ணீர் சிந்தறானே. நீங்க சொன்னது சரியாத்தான் இருக்கும். தற்கொலை செய்துக்க வந்தவனாகத்தான் இருக்கும்.”
“பைத்தியமெல்லாமில்லேடி. அவன் ஏதோ பெரிய துக்கத்தில் இருப்பான் போலிருக்கு. துக்கத்தைச் சகிக்க முடியாதவர்கள் இப்படித் தான் இருப்பார்கள்.
“பையத்தியமில்லைன்னா, இவ்வளவு கூட்டத்திற்கு முன்னால் இப்படியா? கொஞ்சம்கூட வெக்கமில்லாமல்? நீங்க பாருங்க அவன் சாகறதுக்குன்னே வந்திருக்கான். நிச்சயமாக.”
“போடீ மடச்சி. தற்கொலை செய்யறது அவ்வளவு சுலபமான தல்ல. மனுஷனுக்குப் பயமிருக்கிறதே? இறப்பதைப் பற்றிய பயமில்லை என்றாலும் இறப்பிற்குப் பிறகுள்ளதைப் பற்றிய பயம்?”
“கிறுக்கனுக்கு என்ன பயம்? சித்தம் கலங்கிப் போனவர்களுக்கு வாழ்வதற்கும் சாவதற்கும் என்ன வித்தியாசம் இருக்கப் போகிறது?”
“போடீ மடச்சி, வாழ்விற்கும் சாவிற்கும் இடையிலும், இன்றைக்கும் நேற்றைக்கும் நாளைக்குமிடையிலும், தனக்கும் மற்றவர்களுக்கும் இடையிலும் வித்தியாசமொன்றும் காண முடியாதவர்களைக் கீதையில் என்னவென்று அழைக்கிறார்கள். தெரியுமா உனக்கு? எல்லாம் உணர்ந்தவர்கள், முக்காலமும் அறிந்தவர்களென்று. அவர்கள்தான் இவ்வுலகில் மகாத்மாக்கள்.”
நான் பேசுவதைக் கவனிக்காமல் என் மனைவி அப்போது விஷயத்தை மாற்றினாள். ‘அங்கே பாருங்கள், அவன் எங்கே போகிறான் என்று பாருங்கள்.’
நான் பார்த்த போது அவன் சற்று சாய்ந்த வாக்கில் மணலில் தளர்ந்து இழையும் கால்களோடு கொஞ்சம் தள்ளியிருந்த கருங்கல் சுவரை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். எங்களுக்கு முன்பாக முதுகைக் காட்டி நடந்து கொண்டிருந்ததால், அவன் அழுகிறானா என்பதை என்னால் அறிய முடியவில்லை. ஆனால், அவன் தோள்கள் குலுங்கிக் கொண்டிருந்தன, இருமுவது போல். இடையிடையே எதையோ மறந்து விட்டதைப் போல அங்கங்கே நின்றபடி செல்லும் அவனைப் பார்த்து என் மனைவி, “தூக்கத்தில் நடப்பது போல இருக்கு” என்றாள்.
“ஆபரேஷனுக்கு மயக்க மருந்து கொடுத்து படுக்க வைத்தவன் எழுந்து நடப்பது போல இருக்கு” என்றேன் நான்.
“யாருக்கு தெரியும். தீராத வியாதி ஏதாவது வந்திடுச்சோ என்னமோ? இல்லையின்னா சாவுக்குத் துணிவானா?”
எனக்குப் பயங்கரக் கோபம் வந்தது. “நீ என்ன கடவுளா, அவனுடைய மனசுக்குள்ள என்ன இருக்குன்னு தெரியுமா உனக்கு? ஒரு மனுஷனுக்குத் தீர்ப்பு சொல்ல உனக்கு யாரு அனுமதி தந்தது? நல்லவன் என்றோ தீயவன் என்றோ சொன்னாலும் பரவாயில்லை, அவனுடைய வாழக்கையையே உன் வார்த்தைகளால் முடிவுக்குக் கொண்டு வருகிறாயே. நீ ஒரு கழுதை தான்.”
அதற்குள் அவள் கத்தினாள்: “என் நாக்கால் நான் சொன்னால் அவன் உடம்பில் படப் போகுதா? நீங்க எதுக்கு இப்படி குதிக்கறீங்க?”
“நாக்கால் எதுக்குச் சொல்லணும். நீ பார்த்தாலே போதும் முடிந்து விடும். உன் பார்வையின் பலனைத் தவிர்க்க அவனால் முடியுமா? ஒன்று நீ பார்ப்பதற்கு முன்பாகவே உன் கண்களைத் தோண்ட வேண்டும். அப்படியே செய்தாலும் உன் மனதின் பயணத்தைத் தடுக்க முடியாது. அதற்கு உன்னை அவன் கொல்லணும். புரிந்ததா?”
நான் சொன்னதைக் கேட்காத பாவனையில் அவள் வேறு பக்கம் திரும்பிப் பார்த்தபடி, “அதோ அவன் அந்தக் கருங்கல் சுவருக்கு மேலே ஏறிப் போகிறான்” என்றாள். நான் பார்க்கும் போது சுவரின் மீது முன்பே ஏறி அமர்ந்திருந்த குழந்தைகள் முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்க, அவன் தன் உதறும் கைகளால் கற்களைப் பிடித்தவாறே உச்சியை நோக்கி ஏறிக் கொண்டிருந்தான். கலங்கரை விளக்கிற்குச் சற்று அருகில் தொடங்கிய கடற்சுவர் கடலுக்குள்ளாகவே இறங்கித் தான் இருந்தது.
“ஏய், அவன் கிறுக்கனில்லை. மனோதிடம் இல்லாத வெறும் கிறுக்கனாயிருந்தால் குழந்தைகள் அவனைப் பார்த்து இப்போது கிண்டலடித்திருப்பார்கள். குழந்தைகளுக்கு என்ன தெரியுமென்று நினைக்கிறாயா? அவர்கள் அவனை எவ்வளவு கூர்ந்து கவனிக்கிறார் களென்று பார். ஒரு பெரிய மனிதன் தங்களோடு ஏன் விளையாட வருகிறான் என்கிற ஆச்சரியம்தான் அவர்களுக்கு.”
“குழந்தைகளுக்கு என்ன தெரியும்? தற்கொலைக்கு முயற்சி பண்றது கிறுக்கில்லையாம்.”
நான் மணலில் ஒரு விதையின் படத்தை வரைந்து கொண் டிருந்தேன். “ஏண்டீ, பைத்தியம்ன்னா என்ன? வாழ விரும்பறதுக்கும் சாக விரும்பறதுக்கும் இடையில் என்ன வித்தியாசம்? இரண்டும் மனசோட செயல்கள்தானே? சுயநினைவோடு நான் என் வாழ்க்கை யில் நினைத்ததைச் செய்வதில் என்ன பைத்தியக்காரத்தனம் இருக்கு? ஆனால், நான் என் வாழ்க்கையைக் கொண்டு உன் தலையில் அடிக்க வந்தால் அது….”
அதற்குள் என் மனைவி “அடக் கடவுளே” என்று கூச்சலிட்டாள்.
நான் திரும்பிப் பார்ப்பதற்குள் அவன் கடலில் குதித்து விட்டான். கற்களுக்கிடையில் அவன் ஓடுவதை என் மனைவி பார்த்தாளாம். தண்ணீர் தெறித்ததைப் பார்த்ததாகத்தான் நான் நினைக்கிறேன். ஆனால் சூரியன் மறைந்திருந்தது. இதைப் பார்த்தவர்கள் சுவரை நோக்கி ஓடிக் கொண்டிருந்தனர்.
என் மனைவியின் வாய் எப்படி மூடியதோ தெரியவில்லை. அவள் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தாள். ஆனாலும் “ஹோ, நான் அப்போதே சொன்னேனில்லையா? முழுப் பைத்தியம்தான்?” என்றாள்.
“இறந்து போனவர்களைப் பற்றித் தவறாகச் சொல்லாதே. தெரிந்தும் தெரியாமலும்” என்றேன் நான்.
