கல்லெறியாதீர்கள்/அனங்கன்.

உங்கள் செல்லங்களில்லை
நாங்கள்…
தெருப்பொறுக்கிகள்தான்.
ஆயினும் தெரு மாறமாட்டோம்.

வீதிகளே நதிகளாய் மாறிவிட்டபிறகு…எல்லாம்
இருப்பவர்களே தடுமாறுகிறார்கள்…எங்களுக்கான
நிலையை
நனைந்துநிற்கும் நாங்கள்
எவ்விதம் சொல்ல…

உங்களுக்கான உணவுப்பொட்டலம் எவ்விதத்திலாவது
உங்களுக்கு வந்துவிடும்…
நீரில் மிதக்கும் நெகிழிப்பைகளில் எவ்விதம்
உணவுதேடுவது.

குளிரில் நடுங்கியபடி ஒதுங்கஇடம்தேடும் எங்களை
“சீ”யென்று விரட்டி சிறுமைப்படுத்துகிறீர்கள்.
உணவில்லையாயினும் ஒதுங்க இடமிருந்தால் நாங்களும்
பிழைத்துப்போவோம்.

ஆகவே ஆறறிவு வாசிகளே! கருணைகொண்டு
கல்லெறியாதீர்கள்.
ஏனெனில்உங்களுக்கான
“முதல் கல்” எவ்விடமிருந்தாவது வரும்.

One Comment on “கல்லெறியாதீர்கள்/அனங்கன்.”

Comments are closed.