தி சோ வேணுகோபாலன் கவிதைகள் – ஞானம்

தொகுப்பாசிரியர் : அழகியசிங்கர்

                                       

    சாளரத்தின் கதவுகள், சட்டம்;
    காற்றுடைக்கும்.
    தெருப்புழுதி வந்தொட்டும்.
    கரையான் மண் வீடு கட்டும.

    அன்று துடைத்தேன்,
    சாயம் அடித்தேன்,
    புதுக்கொக்கி பொருத்தினேன்.

    காலக் கழுதை
    கட்டெறும்பான
    இன்றும் 
    கையிலே
    வாளித்தண்ணீர், சாயக்குவளை,
    கந்தைத்துணி, கட்டைத் தூரிகை;

    அறப்பணி ஓய்வதில்லை
    ஓய்ந்திடில் உலகமில்லை!

தி சோ வேணுகோபாலன் கவிதைகள் – சிறை – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)
https://daily.navinavirutcham.in/?p=2915