சுரேஷ் கவிதைகள்


உறை பிரியாத வாளொன்று;
சமர் புரியாத நாளொன்று;
இல்லறத்தில் தீதெ(த)ன்று

*
வேறொன்றும் அசையாததோர்
விடியலில்;
சிறகு விரித்ததோர்
எண்ணப் பறவை

*
அன்று கரம் பற்றிய
விரல்கள்;
இன்று பொருள் பற்ற
நடுங்குகையில்

**
காற்றும் கடலும்
என் செய்யும்;
மந்தியென் மதி
மௌனமாகிப் போன பின்;

**
ஓரேழு நாளாய்
தூவி சிதறும்
அட்சதைகளாய்
மழைத்து(தூ)ளிகள்
யாருக்கான ஆசீர்வாதம்

*
எப்பொழுதும் ஏதொன்றுக்கும்
ஆகாதெனினும்
முப்பொழுதும்
உன் தீண்டலில்

2 Comments on “சுரேஷ் கவிதைகள்”

Comments are closed.