கோடி எட்வர்ட் லீ மில்லர் கவிதை

தமிழாக்கம் : க.மோகனரங்கன்

உண்மை அல்லாத கவிதை,
முட்கள் இல்லாத ரோஜாவை ஒத்தது,
ஆயினும் அழகாகவே
அது இருக்கிறது.
ஆனால் சில சமயங்களில்
நம்மை இரத்தம் சிந்த வைக்கும் விஷயங்களிலிருந்துதான்
மெய்யான அழகு வருகிறது.